தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஏகே 62 படத்தில் கமிட்டான நிலையில் கதையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கத்தை யாரோ சிலர் ஹேக் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்கி பகிர்ந்து காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.