ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேர்தலை முன்னிட்டு கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து செப்டம்பர் மாதம் இறுதியிலும், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் என 3 பிரிவுகளாக வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தற்போது 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரை சந்தித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினார்.

அதில் அவர் “மக்களவைத் தேர்தலின் போது இந்திய கூட்டணி மனதளவில் மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டதாகவும், அவர் ராகுல் காந்தியால் தோற்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை மற்றும் மரியாதையை ஆகியவற்றையால் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்” எனவும் அவர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பு இருந்த மோடியின் உடல் மொழியானது தேர்தலுக்குப் பின்பு முற்றிலுமாக மாறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்பு யூனியன் தேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டதையும், ஒரு மாநிலம் யூனியன் தேசமானதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தான் ஜம்மு-காஷ்மீர் மக்கள் எங்களுக்கும் இந்த நாட்டிற்கும் முக்கியம் எனவும் அவர் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.