
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை, பாறைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (19). இவர் சமூக வலைதளம் செயலியான முகநூலில் இருதரப்பு கிடைய பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சை கூறிய பதிவுகளை பதிவிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இத்தகவலின் பேரில் மூன்றடைப்பு காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் முருகேஷ் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் இரு தரப்பினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வசனங்களை மனோஜ் குமார் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எஸ்.பி சிலம்பரசன் கூறியதாவது, சமூக வலைதளங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவுகள் வெளியிடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.