ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக பொருளாளர், தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஒப்படைத்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்த பின், அந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு பேங்கின்  லாக்கரில் வைக்கப்பட்டது. இதனை ஆண்டுதோறும் அதிமுக கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக பொருளாளரான சினிவாசன் வழக்கு தொடர்ந்தார். அதன்படி அந்த தங்க கவசம் சினிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. வருகிற 30-ம் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசத்தை எடுத்து சினிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் கலந்து கொண்டனர்.