
மும்பையில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் காவல்துறை கட்டுப்பாடு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாகவும், அதற்கான ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போன் செய்த நம்பரை வைத்து டிராக் செய்து, சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் PRANK செய்ய மிரட்டல் விடுத்ததும், கிரிமினல் பின்னணி இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் காவல் துறையினர் மிரட்டலுக்கான காரணம் என்ன?, அந்தப் பெண்ணுடன் யார் எல்லாம் தொடர்பில் உள்ளன என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.