இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடு ரஷ்யா. ஆனால் இந்த நாட்டில் மக்கள் தொகை வெறும் 14 கோடி தான். ரஷ்யாவில் மக்கள் தொகை விகிதம் குறைந்து வருவதால் அதனை அதிகப்படுத்த அரசாங்கமும் அதிபரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் கூட அலுவலகங்களில் டீ பிரேக் டைம்களில் ஊழியர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதே போன்ற குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா பாலியல் அமைச்சகத்தை அமைக்க பரிசீலனை செய்துள்ளது. அதாவது இதன் மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் 2 மணி வரை இன்டர்நெட் சேவையை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளனராம். மேலும் ஆண் மற்றும் பெண் இருவரும் டேட்டிங் செல்வதற்கு பணம் வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.