பழைய படங்களில் முன்னணி நடிகர் சிவகுமார். இவரது மூத்த மகனான நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிறந்து விளங்குகிறார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் முதலில் நேருக்கு நேர், நந்தா, பிதா மகன், காக்க காக்க, பேரழகன் போன்ற பல வெற்றிப் படங்கள் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் நடிகர் சூர்யா பிஸியாக உள்ளார்.

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் தற்போது கலந்து கொண்ட சூர்யா தான் சினிமாவிற்கு வந்த காரணத்தை தெரிவித்து இருந்தார். இது குறித்து சூர்யா கூறியதாவது, என் அம்மா, என் அப்பாவிற்கு தெரியாமல் ரூபாய் 25,000 கடன் வாங்கி இருந்தார். இதனை என் அம்மா என்னிடம் கூறினார். உடனே நான் என் அம்மாவிடம் சென்று நான் உங்கள் கடனை அடைக்கிறேன் என்று கூறினேன். நான் அப்போது பிரபல நடிகரின் மகன் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மிக எளிதாக கிடைத்தது. இதனால் என் அம்மாவின் கடனை அடைப்பதற்காக சினிமாத்துறைக்கு சென்றேன். இதன் காரணமாகவே தற்போது உங்கள் முன் நடிகர் சூர்யாவாக நிற்கிறேன். இவ்வாறு விழாவில்  தெரிவித்திருந்தார்.