2024 CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் இந்த தேர்வு மார்ச் 11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் pgcuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.