மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருந்தால் தமிழக மாணவர்கள் க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்ற விதியை தளர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட தேவை இல்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.