மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவு தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. CUET நுழைவு தேர்வுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2021ல் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தேர்ச்சி என மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சிக்கலை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதிப்பெண்கள் கட்டாயம் என்பதால் சி.யூ.இ.டி தேர்வில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.