
2024 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான CTET விண்ணப்பங்களில் இன்று முதல் ஏப்ரல் 12 வரை தங்கள் விவரங்களை சரி பார்த்து திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். ஜூலை ஏழாம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறும்.