இந்திய சினிமா ரசிகர்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த ஒன்றாகும். தற்போது  IPL 2023 மேட்ச் நடைபெற்று வருகிறது. நேற்று CSK மற்றும் MI மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

இப்போட்டியை காண சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்துள்ளனர். அந்த வகையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், அஸ்வின், யாஷிகா, தனுஷ், அர்ச்சனா கல்பாத்தி உட்பட பல பிரபலங்கள் ஸ்டேடியம் வந்து IPL போட்டியை பார்த்திருக்கிறார்கள். இந்த போட்டியை பார்க்க யார் யார் வந்தார்கள் என்பது குறித்த  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.