தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது.எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகப்படியாக அரங்கேறி வருகிறது. இதனால்  சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய தீபக் ராஜா படுகொலையானது நெல்லையில் நடந்தது.

இந்த  சம்பவம் அடங்குவதற்குள், தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.