பீகார் மாநிலம் ஷாக்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 25 வயதுடைய பெண் நடனக்கலைஞர் ஒருவர், தனது கணவருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மூன்று பேர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது கணவர், ரயில்வே நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அந்த மூவர் உதவி செய்வதாக கூறி, அவர்களை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த இடத்திலேயே, அவர்கள் துப்பாக்கி காட்டி கணவரை கட்டி வைத்தனர். பின்னர், மக்காச் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகே அந்த பெண்ணை மூவரும் மாறிமாறி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக புகார் உள்ளது.

அந்த நேரத்தில் தப்பிக்க முயன்ற தம்பதியரை, துப்பாக்கியால் அச்சுறுத்தி மிரட்டியதும் தெரிகிறது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையின் பின்னணியில், முக்கிய சந்தேக நபர்களான மனோஜ் மற்றும் மனீஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகினறனர்.