
சமூக ஊடகங்களில் எப்போதும் கணவன்–மனைவி இடையேயான அன்பும், சிரிப்பும் கலந்த வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது அதேபோல ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு தம்பதிகள் சூப்பர் மார்க்கெட்டில் சேர்ந்து பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கணவர் ஒரு பழத்தை எடுத்துத் தருகிறார். ஆனால் மனைவி அது நல்லதா இருந்தாலும், “வேண்டாம்” என மறுத்துவிடுகிறார்.
आखिर मर्द करे तो करे क्या,
जाए तो जाए कहां। pic.twitter.com/QGNEc0Wz9h— Dr. Sheetal yadav (@Sheetal2242) May 28, 2025
இந்த வீடியோவில், கணவர் எவ்வளவு முறைகள் முயற்சி செய்தாலும், மனைவி அவரின் தேர்வுகளை ஒத்துக்கொள்வதில்லை. அதற்கு பதிலாக, அவர் தான் தேர்ந்தெடுக்கும் பழத்தையே வாங்கவேண்டும் என்று சொல்கிறார். இது ஒருமுறை மட்டும் அல்ல, தொடர்ந்து பல முறைகளாக நடக்கிறது. இந்த வீடியோவை @Sheetal2242 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோர் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “மனைவிக்கு பிடித்த ஆணின் எந்த தேர்வும் ஒத்துக்கொள்வதில்லை என்பது உண்மை!” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த மாதிரி காட்சி ஒவ்வொரு வீட்டிலேயும் தினசரி நடக்குது!” என்று ஒரு பயனர் கூறியுள்ளார். வீடியோ மிக இயல்பான குடும்ப நகைச்சுவையாக இருப்பதாலும், எல்லாரும் இதை ரசித்து பார்த்து வருகின்றனர்.