கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சபை கூட்டம் குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பு, சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் இரண்டு பாம்புகளை அடைத்து வந்து கூட்டத்தில் காண்பித்தவாறு பேசியுள்ளார்.

எனது வார்டு பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சி சார்பில் பாம்பு பிடி வீரரை நியமிக்க வேண்டும். வார்டு பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பேசியுள்ளார். கவுன்சிலர் பாம்புகளுடன் வந்ததால் சபை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.