அதானி குழுமம் 100 கோடி ரூபாயை நன்கொடையாக யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தெலுங்கானா அரசு, அதை நிராகரித்து விட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அந்த பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை வழங்குகின்றனர். அந்த வகையில் அதானி குழுமமும் நன்கொடை வழங்கியது. ஆனால் அதனை மாநில அரசு ஏற்க மறுத்தது. தெலுங்கானாவின் கண்ணியம் மற்றும் கவுரத்தை பாதுகாக்க நாங்கள் அந்த நன்கொடையை ஏற்கவில்லை.

இந்த நன்கொடையை ஏற்கவில்லை என்று அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டோம். இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தின் நகலை செய்தியாளர்களுக்கு ரேவந்த் ரெட்டி வழங்கினார். அதோடு அவர்களிடமிருந்து அதிக விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக அந்நிறுவனம் ஆந்திர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. அதை மறுத்து அமெரிக்கா போன்ற நாட்டில் உள்ள முதலீட்டார்களிடம் இருந்து நிதி வாங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.