மகாராஷ்டிராவின் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா அணியில் உள்ள எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் சன்மானம் தருவதாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்திய நிலையில் அதற்கு தற்போது அவர் மறுத்துள்ளார். அதோடு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிணடே கலந்து கொள்ளும் என்னுடைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாய்கள் நுழையக்கூடாது என்றும் அவர்கள் அப்படி நுழைந்தால் அங்கேயே புதைத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக கடந்த மாதம் அவருடைய காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியான நிலையில், சஞ்சய் போலீஸ் லத்தியால் ஒருவரை தாக்கும் வீடியோவும் வெளியானது. அதே சமயத்தில் அவர் தான் ஒரு புலியை வேட்டையாடியதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.