
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முதல் முறையாக புதுச்சேரி மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்ட முறையில் பொதுத்தேர்வு எதிர் கொள்ள உள்ளனர். இதனால் குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் முயற்சியில் புதுச்சேரி அரசு கட்டாய தேர்ச்சி ரத்து முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்ததாவது, புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுவதால் மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அதன் அடிப்படையில் தான் இந்த முறையான பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசின் திட்டம் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளும் கட்டாயமாக இந்த திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.