திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருஈங்கோய்மலை அருகே காவிரி பாலம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பால தடுப்பு சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவப்பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.