தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவர் கடைசியாக ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஹிட் 3 என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்/ இந்த படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி. இந்தப் படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நானி போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் குழந்தைகளுக்கும், இதய பலவீனமானவர்களுக்கும் ஏற்றது கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.