தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸி திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்தது. அந்த வகையில் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என சற்று முன் படக்குழு அறிவித்தது.
The date is locked for the ultimate action 🎯
The Mad and Massy ride of #Madharasi is coming – from September 5th in theatres worldwide 🔥#Madharasi / #DilMadharasi IN CINEMAS WORLDWIDE SEPTEMBER 5th ❤🔥#MadharasiFromSep5#SK23@Siva_Kartikeyan @ARMurugadoss… pic.twitter.com/uNGpVF2GmZ
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) April 14, 2025
