தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடி வைத்த அவர், தொடக்கம் முதலே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ படத்தில் நடித்து வருவதுடன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். அத்துடன், ‘புரோ கோட்’ எனும் புதிய படம், மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகி வருவதாகவும், இதை அவரது சொந்த நிறுவனமான ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Karthik Ganeshwar S (@third_slip__)

இந்த தயாரிப்பு நிறுவனம் இன்று சென்னையில் ஓர்சிறப்பான விழாவில் அறிமுகமாகியுள்ளது. விழாவில், அவரது நெருங்கிய தோழி கெனிஷா, நடிகைகள் ஜெனிலியா, சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவராஜ்குமார், எஸ்ஜே சூர்யா, மணிகண்டன், பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என திரையுலகின் பலர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கும் முதல் இரண்டு திரைப்படங்களுக்கான பூஜை நிகழ்வும் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு அம்சமாக, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ரவிமோகன்-ஜெனிலியா நடித்திருந்த பிரபலமான காபி ஷாப் சீனை இருவரும் மேடையில் மீண்டும் நடித்தனர். இந்த க்யூட் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.