
மும்பையில் நேற்று உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நூறுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டார்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இங்கு கூடியுள்ளனர். திறமை மற்றும் படைப்பாற்றல் கொண்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்.
ஒவ்வொரு கலைஞருக்கும், படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு தளமாகும் இந்த மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தியா கோடிக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பதோடு பில்லியன் கணக்கான கதைகளின் பூமியாகவும் உள்ளது. இந்தியாவை பிரபலப்படுத்துவதில் சினிமா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் உருவாக்கு உலகத்துக்காக உருவாக்கு என்பதற்கு இதுவே சரியான நேரம் ஆகும் என்று தெரிவித்தார்.
இந்திய சினிமாவில் ஐந்து பிரபலங்களின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். குருதத், பி.பானுமதி, ராஜ் கோஷ்லா, ரித்விக் கடக், சலீம் சவுத்ரி ஆகியோரின் தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் மத்திய மந்திரி, மகாராஷ்டிரா முதல் மந்திரி, நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.