தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்த சீனாவும் ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும் உக்கரனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்த போர் பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட்ஸ் பட்டியாலா கடல் பகுதியில் இந்த போர் பயிற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்த தென்னாப்பிரிக்கா அதே ரஷ்யாவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.