
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று DMK Files என்ற பெயரில் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதோடு தான் கையில் கட்டி இருக்கும் ரபேல் வாட்சின் விலை 3 லட்ச ரூபாய் தான் என்றும் அதற்கான பில்லையும் அண்ணாமலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து பேசினார். அதாவது முதல்வர் ஸ்டாலின் ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் வாட்சை கட்டி இருக்கிறார். இதன் ஆரம்ப விலை 1.3 கோடி ரூபாயாம். அதிகபட்சமாக 2.25 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறினார்.
அதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கார்கள் மற்றும் வாட்ச் ஆகியவற்றின் விலை பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அதன்படி உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.1.64 கொடி முதல் ரூ. 1.84 கோடி மதிப்பிலான range rover sports car, ரூ. 82.54 லட்ச ரூபாய் மதிப்பிலான volvo XI.60 கார், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான Hummer H-3 கார். ரூ. 1.26 கோடி ரூபாய் மதிப்பிலா porsche cayenne கார் போன்றவற்றை வைத்துள்ளாராம். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8.78 லட்ச ரூபாய் மதிப்பிலான Penerai வாட்சை கையில் கட்டி உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.