அமெரிக்காவில் 1863ல் பிறந்தார் சார்லஸ் மார்ட்டின் ஹால். தந்தை மத போதகர் வீட்டிலேயே அம்மாவிடம் ஆரம்பக் கல்வி கற்றார். 6 வயதில் அப்பாவின் பட்டப்படிப்பு வேதியல் புத்தகத்தை படித்து முடித்தார். வேதியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பிரபல கண்டுபிடிப்புகள் குறித்த சயின்டிஃபிக் அமெரிக்கன் என்ற இதழை படிக்க தொடங்கினார். வீட்டிலேயே சோதனை கூடம் அமைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

ஒரு முறை இவரது பேராசிரியர் ஒருவர் ஒரு அலுமினிய துண்டை காட்டி இதை எளிதான முறையில் தயாரிப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார் என கூறினார். உடனே அது தொடர்பான சோதனையை இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஆய்வகத்தை தனது சோதனைகளுக்கு பயன்படுத்தி வந்த அவர் பின்னர் தனது வீட்டில் ஒரு அறையை ஆய்வுக்கூடமாக மாற்றினார். வேதியளாரான சகோதரி மற்றும் அறிவியல் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் அறிவியல் ஆய்வுகளை தொடர்ந்தார். எட்டு ஆண்டுகள் ஓய்வின்றி பாடுபட்டு 1886 ஆம் ஆண்டில் ரசாயன கலவைகளை மின் பகுப்புக்குள் உட்படுத்தி அலுமினியத்தை பிரித்து எடுத்தார்.

இதற்கு காப்பு உரிமையும் பெற்றார். ஏறக்குறைய இதே சமயத்தில் பிரான்ஸ் விஞ்ஞானி இதே முறையில் அலுமினியத்தை பிரித்தெடுத்தார். எனவே இந்த முறை ஆல் ஹேராடு செய்முறை என குறிப்பிடப்பட்டது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட உலோகம் அலுமினியம் தான். இரும்புடன் சேர்ந்து உலகிலேயே மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய உலோகங்களில் ஒன்றாக இது மாறியது.

அரிதான உலோகமாக கருதப்பட்டு அலுமினியத்தை சுலபமாக கிடைக்க செய்து பல்வேறு விதத்தில் எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும் உலோகமாக மாற்றினார். இரும்புக்கு மாற்றாக தற்போது பரவலாக அணுமினியம் பயன்படுத்தப்படுவதற்கு இவரே முக்கிய காரணம். அலுமினியத்தை பிரித்தெடுக்கும் நுட்பத்தை கண்டுபிடித்தவர் மூலம் மனித வரலாற்றில் உலோகங்களின் பயன்பாடு வரலாற்றையே மாற்றியமைத்த சார்லஸ் மார்ட்டின் ஹால் 1914 இல் தனது 51 வது வயதில் இயற்கை எய்தினார்.