கடந்த சில வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தேர்வுகள் கடந்த வருடம் முதலே நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் TNPSCயால் நடத்தப்படும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பணிகளுக்கான முதல்நிலைத்  தேர்வுகள் 20.04.2023 மற்றும் 03.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முழுக்க முழுக்க கணினி வழித் தேர்வாக நடத்த இருப்பதால் பழைய தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.