
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் இந்திய அணிக்காண ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதனால் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக வருகிற 15ஆம் தேதி இந்திய அணி துபாய்க்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.