உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் google நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு google நிறுவனத்தின் ஊழியர்களிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அந்நிறுவனம் 226 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. இதில் 226 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 1854 கோடி ரூபாய். இதில் பங்குகளாக மட்டும் 218 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. 218 மில்லியன் என்பது இந்திய மதிப்பில் 1788 கோடி ரூபாய். 226 மில்லியன் என்பது google நிறுவனம் சராசரி ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும். மேலும் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது சுந்தர் பிச்சைக்கு மட்டும் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.