ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ பெற கட்டணம் அறிமுகம் செய்யப்பட்ட பின், பணம் செலுத்தாதவர்களுக்கு ப்ளூ டிக் சரிபார்ப்பு அடையாளம் நீக்கப்பட்டது. இதனால் பல பிரபலங்களின் கணக்குகள் ப்ளூ டிக் இழந்துள்ளன. இந்நிலையில் எலான் மஸ்க், முக்கிய முடிவை எடுத்தார். 1 மில்லியன் (10 லட்சம்) பின்தொடர்பவர்களை கொண்ட பிரபலங்களின் கணக்குகளுக்கு ப்ளூ டிக் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கும் ப்ளூ டிக் வந்துள்ளது.