இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக் கழகம் 5.39 லட்சம் டன் கோதுமையை வாடிக்கையாளர்கள் மற்றும் மாவு ஆலைகளுக்கு 5-வது சுற்று மின் ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.

அடுத்த வாராந்திர மின்னணு ஏலம் மார்ச் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தகைய விற்பனையின் மூலம் நாடு முழுவதும் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலைகளை குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் கோதுமையின் திறந்த விற்பனைக்கான எதிர்கால டெண்டர்களுக்கு நிலையானதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.