தமிழ் சினிமாவில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான சை. கௌதம ராஜ் தற்போது கழுவேத்தி மூர்க்கன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடிக்க ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க டி. இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரில் சாதி நமக்கு சாமி மாதிரி போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.