செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போ என்ன பாப்பான் என்னை  ( விஜயலக்ஷ்மி விவகாரத்துக்குள்) இதுக்குள்ள தள்ள  பாப்பான். இப்ப அவனால சமாளிக்க முடியல. பாத்தீங்களா…  இந்த பத்து நாள் ஆச்சா.. நான் வீட்டை விட்டு கிளம்பி,  காலையில பிரஸ் மீட்டு… மாலையில கூட்டம்…. காலையில பிரஸ் மீட்.. மாலையில் கூட்டம்… என்னை  சமாளிக்க முடியல. நான் எழுப்புகிற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. அப்படி இருக்கும் போது என்னடா பண்ணலாம்ன்னா…

ஒரு சின்ன டைவர்ஷன் கொடு. ரோடு போட்டுட்டு இருப்பான் டேக் டைவர்ஸன்(  லெஃப்ட் டேக் ) இப்படி திருப்பலாம். இல்ல,  அப்படி திருப்பலாம் என்பது மாதிரி இது ஒரு செய்தி. அதுவும் ஒரு செய்தி ஆகிரும். நான் உங்களுக்கு ஒன்னு சொல்றேன் பாருங்க…   திரைப்படம் எடுத்துட்டு இருந்தவனை கூட்டிட்டு போய் எங்க அண்ணன்…  எனக்கு சில வேலைகளை கொடுத்தார் செஞ்சிட்டு இருந்தேன்.

என்னைய சிறையில திரும்பத்… திரும்பத்… திரும்ப… திரும்ப போட்டு என்னை இந்த இனத்தின் தலைவனா ..? இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்டியது யார் தெரியும் இல்ல ? ஐயா கருணாநிதி. அவர்தான் தலைவனா அடையாளம் காட்டினார். அதுக்கு அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். இந்த திராவிட முன்னேற்றக் கழகம், அது சார்ந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி, திராவிட கழகங்கள். இவங்க எல்லாம் சேர்ந்து என்னை எழுதி… எழுதி.. எழுதி… எழுதி… பேசி… பேசி… மக்கள்ட்ட கொண்டு சேர்த்து,  என்னை முதலமைச்சராகிட்டு தான் விடுவாங்க.  நீங்க வேணா பாருங்க. நடக்கும் பாருங்க என தெரிவித்தார்.