
குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள விவசாய நிலத்தில் 70 வயதான முதலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரை சைலேஷ் ரத்தோடு என்பவர் கடந்த 15ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும், அப்படி கூறினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி உள்ளார். ஆனால் அந்த மூதாட்டி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைலேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் 18 மாதங்களுக்கு முன்னதாக இவர் இந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததால், காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் ஜாமின் பெற்ற அவர் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த இவர் மீண்டும் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது போலீசார் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.