உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு கடித்ததால் வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்தார். உடனடியாக சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதனைதொடர்ந்து அவர்களது கிராம வழக்கபடி வாழைதண்டில் சுற்றப்பட்டு சரயு ஆற்றில் விடப்பட்டுள்ளார். இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில்  தற்போது 15 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி உள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் தற்போது அங்கேஷ்  நடந்ததை விளக்கி கூறியுள்ளார்.

அதாவது பாம்பு கடித்து என்ன ஆனது என்று தெரியவில்லை. சுயநினைவு வந்து கண்களை திறந்து பார்க்கும் போது பீகார் தலைநகர் பாட்னா அருகே அமன் மாலி  என்ற பாம்பு பிடிப்பவருடன் நான் இருந்தேன். அவர்தான் என்னை வளர்த்துள்ளார். அதன்பின் அவனுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றேன். அங்கே ஒரு வீட்டு உரிமையாளரிடம் சில நாட்கள் தங்கி வேலை செய்தேன் எனக் கூறினார். இந்நிலையில் அமிர்தசரசில் தனது கடந்த காலத்தை பற்றி அங்கே ஒரு லாரி டிரைவரிடம் கூறிய போது, அவரை தன்னுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள அசம்கருக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது ஊரை பற்றியும் தனக்கு நினைவில் இருக்கும் நண்பர்களின் பெயரையும் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்தவர்களில் ஒருவர் அங்கேஷை  படம் பிடித்து முரசோ  கிராமத்தில் தனக்கு தெரிந்த ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக அங்கேஷ்  மணியார் போலீஸ் நிலையத்தை அணுகி கடந்த காலத்தை குறித்து விளக்கியுள்ளார். அதனை தொடர்ந்து அங்கேசின் பெற்றோரை கண்டுபிடித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு வந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அங்கேஷை  அடையாளம் காட்டினர்.

அங்கேஷ் அவர்களின் மகன் தான் என்பதை நிரூபிக்க கிராமத்தில் உள்ள தன் பாலிய நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் போன்றவர்களின் பெயர்களை அங்கே கூறியுள்ளார். போலீஸர் அவர் அங்கேஷ் என்பதை உறுதி செய்த பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாம்பு பாம்பு கடித்து இறந்ததாக நினைத்த ஒருவர் 15 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி வந்த சம்பவம் அந்த கிராமப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.