கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக திருமலேசும், உதவி சப்-இன்ஸ்பெக்டராக முகமது மியானும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முகமது மியான் அங்கு வேலை பார்க்கும் சக காவல்துறையினருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து சூதாடிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் முகமது மியான், ஏட்டுகள் நாகராஜ், சாய் பண்ணா, காவல்துறையினர் இம்ரான், நாகபூஷண் ஆகிய ஐந்து பேரையும் பணியிடம் நீக்கம் செய்து போலீஸ் சுப்பிரண்டு அட்டூரு சீனிவாசலு அதிரடி உத்தரவிட்டார்.