வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியோருக்கு பல்வேறு விதமான சலுகைகள் கொரோனா காலத்திலேயே அளிக்கப்பட்டன. குறிப்பாக சிறுகுறி தொழில்கள் செய்வவோருக்கு புதிதாக கடன் அளிக்கவும், ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி அளிக்க அவகாசம் அளிக்கவும்,  கடன்களுக்கு வட்டியை குறைப்பதற்காக அரசு மானியம் போன்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

அதேபோல கடந்த சில வருடங்களாகவே விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. அது தவிர தற்பொழுது உக்கரையின் போர் காரணமாக உலகெங்கும் ரசாயன உரங்களின் விலைகள் அதிகரித்து இருக்கிறது.  அதற்கான மானியத்தையும் அரசு அளித்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையிலேயே உரங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும். இந்த பட்ஜெட் அதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜகவின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.  அந்த கருத்து பிரதமர் மற்றும் மூத்த தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு,  நிதியமைச்சர் ஆகியோருக்கும் இது தொடர்பான வலியுறுத்தல்கள் அளிக்கப்பட்டு,  அதன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எப்படி தொழில் துறைக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறதோ ?

அதேபோலவே நடுத்தர வர்க்கத்தினர் கையில் வருமானம் அதிகமாக வந்து சேரும் அளவிற்கு….  அதாவது அவர்களுடைய வரிச் சுமை குறைந்து,  கையில் வருமானம் அதிகமாக இருக்கும் ஆனால் அதை அவர்கள் செலவு செய்ய முடியும். அப்படி செலவு செய்வதன் மூலமாக ஒன்று அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்றாலும்,  தொழில்துறைக்கும் பலன் கிடைக்கும். அப்படி செலவு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு  அதிகம் இருந்தால்,

அதன் மூலமாக பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். அப்பொழுது தொழில்துறை அதிகளவில் தங்களது உற்பத்தியை பெருக்க முடியும் என்று பல்வேறு விதமான கணக்குகள் இருக்கின்றன. ஆகவே நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகைகளை அளிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் பல்வேறு வகைகளில் எடுக்கப்பட்டு வருகின்றன.