வருடந்தோறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் அந்த வருடத்தின் வரவு செலவு முழுவதும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டுக்கு பின் மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் பேக்டரை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது வரையிலும் பிட்மென்ட் பேக்டர் விகிதமானது 2.6%ஆக உள்ள நிலையில், இதனை 3.7 சதவீதம் ஆக அதிகரிக்க வேண்டும் என அவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே பட்ஜெட்டுக்கு பின் இந்த விகிதம் இவ்வாறு உயர்த்தப்பட்டால் என்று கூறப்படுகிறது. அடிப்படை ஊதியம் ரூபாய்.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என கூறப்படுகிறது. எனவே வரப் போகும் பட்ஜெட் கூட்டத்தொடரை அரசு ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்.