மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது. தனம், தானிய கிஷன் யோஜனா திட்டம் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3 குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.