அதிமுக அலுவலகம் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி  அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தை தாக்கி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட எடுத்துச் சென்றுவிட்டதாக  ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சிபிசிடி_க்கு மாற்றப்பட்டது.

அதேபோல அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில்  தங்களை எடப்பாடி அணி குண்டர்கள்  தாக்கியதாக ஓபிஎஸ் ஆதாரவாளரான ஜேடிசி பிரபாகரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைஅளித்தார்.அதில் எடப்பாடி பழனிச்சாமி,  சிவி சண்முகம்,  டி.நகர் சத்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி ஜேடிசி பிரபாகரன்  சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இது தொடர்பாக விசாரணை  நடத்தி முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு,  இந்த வழக்கை முடித்து வைத்தார்.