
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரே நாளில் வெளிவரக்கூடிய வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிக குறைந்த அளவில் வாரிசு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இரண்டு படத்திற்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
பொங்கல் தினத்தன்று அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கக்கூடிய துணிவு படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் ஒரு நாளில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் 550 : 550 திரைகள் மூலமாக முழுமையாக தமிழகம் முழுவதும் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இந்த படத்தில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. திரையரங்குக்குள் ரசிகர்கள் வரும்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது., விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் எந்தவித மோதல் சம்பந்த்திலும் ஈடுபடாமல் இருப்பதற்காக பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கைகளையும் அவர்கள் எடுத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல முதல் ஏழு நாட்கள் ஒட்டுமொத்தமா 550 : 550 திரைகள் என ஒதுக்கி இருப்பதாகவும், 7 நாட்களுக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிக அளவில் ஏற்படுத்தி இருக்க கூடிய திரைப்படதிற்கு எதுவாக திரையரங்கம் கூடுதலாக ஒதுக்குவது எனவும் தற்போது முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் திங்கட்கிழமை முதல் தொடங்க இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.