தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நான்கு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். கரூர் பரமத்தி, வேலூரில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், திருப்பத்தூர், சேலத்தில் தல 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.