சென்னையில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சிறுபான்மை மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது திமுக தான். தற்போது கூட வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வருகிறது.

இந்த வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தில் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை. திட்டம் தீட்டி டெல்லி சென்று விட்டார் என்று அவர் தெரிவித்தார். இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயை திறக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.