
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய தலைவர் ஜே. பி நட்டாவையும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்திருக்கிறார்.
நேற்று இரவு எட்டு மணிக்கு பாஜக தேசிய தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து இருக்கக்கூடிய நிலையில் அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை இரண்டு பேரிடமும் பாஜகவினுடைய மாநில அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.பாஜக – அதிமுக கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான் என்று அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தாங்கள் நானாக கூட்டணியில் இருந்து விலகவில்லை. இந்த நிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்ற குற்றச்சாட்டை அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக முன் வைத்திருந்தார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நேரடியாக சென்று அதிமுக தலைவர்கள் ஜே பி நட்டாவை சந்தித்து தங்களுடைய புகாரை அளித்திருந்தார்கள். இந்நிலையில் அண்ணாமலை சந்திப்பு அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.