
தமிழகத்தில் பெண் காவலர்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒன்பது புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ரோல் கால் எனப்படும் பெண் காவலர்கள் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு மாற்றி அமைக்கப்படும். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும். காவல் நிலையங்களில் ஓய்வரை அமைக்கப்படும். பெண் காவலர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.