
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் தான் வானில் அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவி ஆங்கில பாடத்தை தவிர பிற அனைத்து பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன்படி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இதேபோன்று தற்போது திருப்பூர் பல்லடத்தைச் சேர்ந்த மளிகை கடைக்காரரின் மகனான ராகுல் என்ற சிறுவனும் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளான். மேலும் ஒரு மாணவன் மற்றும் மாணவி என இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.