விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ (Thalapathy 69) திரைப்படத்தின் 5 நிமிடக் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்த நிலையில், இன்று 3 மணி நேர முழுப் படமும் வெளியானதாக வரும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பு தரப்புக்கு இடையே நிலவிய சட்டப் போராட்டங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த சூழலில், தற்போது முழுப் படமும் இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இணையத்தில் கசிந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
