வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கையாகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.