குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக ரமேஷ் பாஸிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த இல கணேசன் நாகலாந்து மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சுஸ் ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த ராஜேந்திர அர்லேக்கர் பீகார் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக சிவப்பிரதாப் சுற்றுலா நியமிக்கப்பட்டுள்ளார்.